திமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண் டும் என்று அக்கட்சியின் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 172 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 89 இடங்களில் வென்று வலு வான எதிர்க்கட்சியாக உள்ளது. இருப்பினும் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தது திமுக தலைவர் கருணாநிதி, பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் ஆகி யோரை அதிருப்தி அடையச் செய்துள்ளது.
கட்சி நிர்வாகிகளின் ஒத் துழைப்பு இல்லாததால் தாங்கள் வெற்றி வாய்ப்பை இழந்ததாக தோல்வி அடைந்த வேட்பாளர்கள் கருணாநிதி மற்றும் ஸ்டாலினை சந்தித்து புகார் தெரிவித்தனர். கடந்த மே 24-ம் தேதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்திலும் கண் ணீருடன் பலர் புகார் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட, ஒன்றியச் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்நிலையில் திமுக எம்எல்ஏக் கள் அனைவரும் தங்கள் தொகுதிக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண்டும், 89 தொகுதி களையும் திமுகவின் கோட்டை யாக மாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக திமுக எம்எல்ஏ ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் மிகக் குறைந்த வாக்குகள் வித் தியாசத்தில் பல தொகுதிகளில் திமுக தோற்றது. இதற்கு தொகுதி களில் அதிக கவனம் செலுத்தாததே முக்கிய காரணம் என ஸ்டாலின் கருதுகிறார். தொகுதி மக்களிடம் எப்போதும் தொடர்பில் இருக்கும் பலர் தொடர்ந்து வெற்றி பெறுகின்றனர். எனவே, 89 தொகுதிகளிலும் திமுக மேலும் பலம் பெற வேண்டும். எனவே, அனைத்து எம்எல்ஏக்களும் அவரவர் தொகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திக்க வேண் டும். அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும். அதிகமான அளவுக்கு அரசின் திட்டங்களை பெற்றுத்தர வேண் டும் என ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர் வெற்றி அனுபவம்
ஒரே தொகுதியில் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் துரை முருகன் (காட்பாடி), அர.சக்கர பாணி (ஒட்டன்சத்திரம்), எ.வ.வேலு (திருவண்ணாமலை) போன்றவர்களின் அனுபவங்களை கேட்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிவரும் தேர்தல் களில் 89 தொகுதிகளிலும் திமுக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் பணியாற்ற வேண்டும் என அவர் கண்டிப்புடன் கூறியுள்ளார். இதனால் சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் உடனடியாக தொகுதிக்கு திரும்பிவிட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.