சமூக நீதி சரித்திரத்தில் சாதனை படைத்தவர் எம்ஜிஆர் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தனிக்கட்சி தொடங்கினாலும் பெரியாரின் முக்கிய லட்சியங் களுக்கும், கொள்கைகளுக்கும் மாறாக ஒருபோதும் கட்சியை கொண்டுசெல்ல மாட்டேன் என்று கூறியவர் எம்ஜிஆர். இவர் மக்களை ஈர்த்த நடிகர் என்பதைத் தாண்டி, பசிப் பிணி போக்கி வறுமையின் கோரப் பிடியிலிருந்து எளிய மக்களை காக்க அண்ணா வழியில் பாடுபட்டவர்.
எல்லாவற்றுக்கும் மகுடமாக சமூக நீதி சரித்திரத்தில் அவர் ஒரு அரிய சரித்திர சாதனை செய்தவர். பெரியாரின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதை செயல்படுத்த ஆயத்தமாக்கிக் கொண்டு உறுதி கொடுத்தவர் எம்ஜிஆர். இவர் காண விரும்பிய சமத்துவ சமு தாயம் பூத்துக் குலுங்க அவரது நூற்றாண்டு விழாவில் உறுதி ஏற்போம். இவ்வாறு வீரமணி கூறியுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழக மக்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்தவர் எம்ஜிஆர். ஏழை, எளிய மக்களுக் காகவே வாழ்ந்து காட்டிய பெரு மைக்குரியவர். காமராஜர் கொண்டு வந்த மதிய உணவுத் திட்டத்தை சத்துண வுத் திட்டமாக விரிவுப்படுத்தி ஏழை, எளிய குழந்தை களின் பசியைப்போக்கிய ஏழைப் பங்காளர். பன்முகத்திறன் கொண்ட எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா, தமிழகம் முழுவதும் மட்டுமின்றி, உலகெங்கும் வாழும் தமிழர்களும் சிறப்பாக கொண் டாடுவது மகிழ்ச்சிக்குரியது’ என கூறியுள்ளார்.