தமிழகம் மற்றும் புதுவையின் ஒரு சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழகத்தில் சில நாட்களுக்கு முன்புவரை மிதமான மழை பெய்தது.
இந்நிலையில், தமிழகத்தின் சில இடங்களிலும் புதுச்சேரியிலும் இன்று மிதமானது முதல் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.