புழல் சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் உடல் இன்று பிரேதப் பரிசோதனை செய்யப்படுகிறது. 4 அரசு மருத்துவர்கள் தலைமையில் பிரேதப் பரிசோதனை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் (24), புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் மாலை சிறையில் மின் வயரைக் கடித்து ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக சிறை நிர்வாகம் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அவரது உடல், ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது.
தனது மகன் மரணத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம்சாட்டினார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
எனது மகன் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். சுவாதி கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்ப வைப்பதற் காக போலீஸாரும் சிறைத்துறை யினரும் சேர்ந்து எனது மகனை அடித்துக் கொலை செய்துள்ளனர்.
எனவே, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் எனது மகனின் உடலை பிரேதப் பரிசோதனை செய்யக்கூடாது. பிரேதப் பரிசோதனையின்போது நாங்கள் கூறும் மருத்துவர்களும் உடனிருக்க அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கோரியி ருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று மதியம் நீதிபதி டி.எஸ்.சிவஞானம் முன்பு நடந்தது. அப்போது ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ஆர்.சங்கரசுப்பு ஆஜராகி, ‘‘பிரேதப் பரிசோத னையின்போது எங்கள் தரப்பு டாக்டர் ஒருவரும் உடனிருக்க அனு மதிக்க வேண்டும்’’ என வாதிட்டார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘கீழ்ப் பாக்கம் அரசு மருத்துவமனை பேராசிரியர் எஸ்.செல்வகுமார், உதவிப் பேராசிரியர்கள் மணிகண்ட ராஜா, கே.வி.வினோத் ஆகியோ ருடன் ஸ்டான்லி அரசு மருத்துவ மனை தடயவியல் பொது மருத்துவ நிபுணர் பாலசுப்பிரமணி யனும் இணைந்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலேயே பிரேதப் பரிசோதனையை நடத்த வேண்டும். அதை முழுமையாக வீடியோவில் பதிவு செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவ மனை பொறுப்பாளரான கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறியபோது, மாலை 6 மணி வரை ராம்குமாரின் பெற்றோர் உட்பட யாரும் வரவில்லை. அதனால், பிரேதப் பரிசோதனை நடக்க வில்லை. நாளை (இன்று) பெற் றோரோ, உறவினரோ மருத்துவ மனைக்கு வந்தால்தான் பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என்றார்.