தமிழகம்

மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும்: முதல்வர் பழனிசாமி திட்டவட்டம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் எய்ம்ஸ் மருத்துவ மனை நிச்சயம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் கே. பழனி சாமி உறுதியாகத் தெரிவித்தார்.

கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தபடி, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் அமைக்கப்படும். மத்திய அரசு தேர்வு செய்யும் இடத்தில் இந்த மருத்துவமனை அமையும்.

சில எம்எல்ஏ.க்கள் தங்கள் பகுதிக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என்ற ஆர்வத் தால்தான் ராஜினாமா செய்வதாகக் கூறியுள்ளனர். மூத்த அரசியல்வாதி வைகோ, மலேசியாவில் அவமரி யாதை செய்யப்பட்டது கண்டனத் துக்குரியது. இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்கள் கண்டனக் குரல் எழுப்புவர்.

அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பொதுவெளியில் பேச முடியாது. எங்களுக்குள் பேசி தீர்த்துக் கொள்வோம். எதிர்க்கட்சி கள் கேள்வி எழுப்ப வாய்ப்பில்லாத வகையில், அதிமுக ஆட்சி சிறப்பாக நடைபெறுகிறது.

வியாபாரிகள் பாதிக்காத வகையில் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம்.

ஸ்டாலின் முயற்சி பலிக்கவில்லை

அதிமுக ஆட்சியைக் கலைக்க, திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அது பலிக்காத நிலையில், தற்போதைய ஆட் சியை பினாமி ஆட்சி என்றும், பாஜகவின் பினாமி அரசு என்றும் பேசி வருகிறார். மக்களுக் காகவும், விவசாயி களுக்காகவும் திமுக எதுவுமே செய்யவில்லை.

காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சினைகளில் தமிழகத் தின் உரிமை பாதுகாக்கப்படும். அத்திகடவு-அவிநாசி திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப் படும். வேளாண் சாகுபடிக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க, அனைத்து நடவடிக்கைகளையும் அதிமுக அரசு மேற்கொள்ளும்.

தென்னையிலிருந்து நீரா பானம் எடுத்து விற்பனை செய்ய அனுமதிக் கப்பட்டுள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு நிவாரணம் வழங்கப்படு கிறது. குடிமராமத்துப் பணிகளுக்கு மேலும் ரூ.300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். விவசாயிகளின் நலனைக் காக்க அதிமுக அரசு முழு முயற்சி மேற்கொள்ளும் என்றார்.

SCROLL FOR NEXT