சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது:
சென்னை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்துவம், இஸ்லாம், சீக்கியம், ஜெயின், பார்சி மதங்களைச் சேர்ந்த சிறுபான்மையின மாணவர்கள் பள்ளிப் படிப்பு திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். அவ்வாறு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், முந்தைய ஆண்டின் இறுதித் தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் மாணவர்கள் பெற்றிருக்க வேண் டும். தகுதியுள்ள மாணவர்கள் www.scholarships.gov.in என்ற இணையதள முகவரியில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் மூலம் மட்டும் கல்வி உதவித் தொகை பெறுவதற்காக புதிய விண்ணப்பங்கள், புதுப்பித்தல் விண்ணப்பங்களை ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.