தமிழகம்

‘புத்தகங்கள்தான் மனிதரைப் பண்படுத்துகின்றன’

செய்திப்பிரிவு

தலைமை வகித்து எழுத்தாளர் ச.பாலமுருகன் பேசியதாவது: தற்போது பெரிய அறைகளுடன், பெரிய வீடுகளைக் கட்டுகிறார்கள். ஆனால், அங்கு புத்தக அலமாரிகளே இல்லை. இது போன்ற துயரம் வேறெதுவுமில்லை. புத்தகங்கள் தான் மனிதர்களைப் பண்படுத்துகின்றன.

எந்த ஒரு புத்தகம் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுகிறதோ, ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் புதிய விளக்கங்கள் அளிக்கிறதோ, அந்த புத்தகங்கள் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. அந்தப் பட்டியலில் உள்ளது ‘உச்சாலியா’. இதை எஸ்.பாலச்சந்திரன் அழகாக மொழி பெயர்த்துள்ளார் என்றார்.

பாரதி மெட்ரிக் உயர்நிலைப் பள்ளி முதல்வர் இரா.நாகராஜன் பேசும்போது, “உச்சாலிய நாவல் மராத்திய மொழியில் எழுதப்பட்டது. சாகித்ய அகாடமி விருது பெற்ற இந்த நூலை, எஸ்.பாலச்சந்திரன் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.

மராத்தியில் இதை எழுதியவர் லட்சுமண் கெய்க்வாட். இவர் தனது வாழ்க்கை அனு பவத்தை சுயசரிதை நாவலாக எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் நிலைத்து நிற்கும்”என்றார்.

இந்த நாவலை தமிழில் மொழிபெயர்த்த எழுத்தாளர் எஸ்.பாலச்சந்திரன் ஏற்புரையாற்றினார். கவிஞர் புவியரசு, பேராசிரியர்கள் சா.பெரியசாமி, அறச்செல்வி, சுபசெல்வி, கவிஞர் கவிஜி, முனைவர் ஆறுமுகம், கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் வெ.சுப்பிரமணியன், செயலாளர் ப.பா.ரமணி, நியூ செஞ்சுரி புத்தக நிலைய மேலாளர் ஆர்.ரங்கராஜன், ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாவட்டச் செயலாளர் ஏ.அஸ்ரப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

SCROLL FOR NEXT