தமிழகம்

மதுரை அருகே தயாராகும் 18 அடி நீள அரிவாள்: மாரநாடு கருப்பணசாமிக்கு மலேசிய தமிழர் நேர்த்திக் கடன்

செய்திப்பிரிவு

திருப்பாச்சேத்தி அரிவாள் தென் மாவட்டங்களில் புகழ் பெற்றது. இங்கு தயாராகும் அரிவாள் முனை கூராக இருக்கும். எதற் கும் வளையாது. இதற்காக திருப்பாச்சேத்தி பகுதி பட்டறைக்கு தேடி வந்து விவசாயிகள் வாங்கிச் செல்வார்கள்.

காலப்போக்கில் மதுரையை ஒட்டியுள்ள திருப்புவனம் பகுதிக் குள் பெரும்பாலோனர் இடம் பெயர்ந்துள்ளனர். இதனால், திருப் பாச்சேத்தி செல்வோர் திருப்பு வனத்தில் உள்ள பட்டறைக்கும் சென்று ஆர்டர் கொடுத்து அரிவாள் வாங்கிச் செல்கின்றனர்.

அதேபோல் கருப்பணசாமி கோயிலுக்கு பக்தர்கள் காணிக் கையாக அரிவாள் செய்து நேர்த் திக் கடன் வழங்குவது வழக்கம். அந்த வகையில், மதுரையைச் சேர்ந்தவரும், தற்போது மலேசியா வில் வசிப்பவருமான தமிழர் ஒருவர், அவரது குல தெய்வமான மாரநாடு கருப்பணசாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக 18 அடி நீள அரிவாள் தயார் செய்வதற்கு திருப்புவனத்தில் உள்ள லெ.கார்த்தியிடம் ஆர்டர் கொடுத்துள்ளார்.

இதுகுறித்து லெ.கார்த்தி, `தி இந்து’விடம் கூறியதாவது:

மதுரையைச் சேர்ந்தவர் மலே சியாவில் தொழில் செய்து வருகி றார். அவரது குலதெய்வமான மாரநாடு கருப்பணசாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்கு 18 அடியில் அரிவாள் தயாரிக்க ஆர்டர் கொடுத்தார். அதை தயாரித்து வரும் 25-ம் தேதி வழங்குவதற்காக அரிவாள் தயாரிக்கும் வேலை செய்து வரு கிறோம். ரூ.25 ஆயிரம் செலவில் தயாரிக்கிறோம். இது சுமார் 150 கிலோ எடையுடையது. உருக்கு, இரும்பால் செய்யப்பட்ட அரிவாளை லாரியில் எடுத்துச் சென்றுதான் நேர்த்திக் கடன் செலுத்த முடியும் என்றார்.

SCROLL FOR NEXT