தமிழகம்

அரசு ஊழியர்களின் பொது சேமநல நிதி கணக்கு அறிக்கையை மாநில கணக்காயர் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்

செய்திப்பிரிவு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 2016-17-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கையை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் இம்மாதம் முதல்வாரத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை துணை மாநில கணக்காயர் (நிதி) வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு பணிநிலை சார்ந்த அனைத்து இந்திய அரசு சேவை அதிகாரிகள், தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சி ஒன்றியம், நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் 2016-2017-ம் ஆண்டுக்கான பொது சேமநல நிதி வருடாந்திர கணக்கு அறிக்கை தமிழ்நாடு மாநில கணக்காயர் அலுவலக வலைத்தளத்தில் (>www.agae.tn.nic.in) இம்மாதம் (ஜூன்) முதல் வாரத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

பொது சேம நல நிதியின் கணக்கு இருப்பை அறிவது போன்றே சந்தாதாரர்கள் இந்த வலைத்தளத்தில் இருந்து தங்களின் 2016-2017 வருடாந்திர கணக்கு அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT