தமிழகம்

ஜெயலலிதா படங்களை நீக்க மாவட்ட ஆட்சியரிடம் தேமுதிக மனு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு விளம்பரங்களில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப் படங்களை அகற்றக் கோரி, தேமுதிகவினர் நேற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தேமுதிகவின், காஞ்சிபுரம் நகர செயலாளர் சண்முகம் தலைமை யில் தேமுதிக கட்சியைச் சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் அணி திரண்டு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வி.கே.சண்முகத்தை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர். தேமுதிகவினர் அளித்த கோரிக்கை மனுவில் குறிப்பிடுவதாவது:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏராளமான அரசு அலுவலகங்களிலும் மற்றும் இந்த மாவட்டத்தின் அரசு சார்ந்த விளம்பர பலகைகளிலும் ரேஷன் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் பொருட்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் இலவச பொருட்களிலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் படம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நீக்கி, வரலாற்று சிறப்புமிக்க தமிழக அரசு முத்திரையை அதில் அச்சிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT