பயிர்கள் கருகிய அதிர்ச்சியால் மரணமடைந்த, விவசாயிகளின் குடும்பங்களுக்கும், வேலையிழந் துள்ள விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து இந்திய கம் யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த 30-ம் தேதி தலைமை செயலகத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம், தமிழ் மாநில விவசாயத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளிடம் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உறுதியளித்தபடி சென்னை நீங்கலாக பிற மாவட்டங்களை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்கும் நடவடிக்கையை அரசு மேற்கொண்டிருப்பதை வரவேற்கிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை பின்னர் முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரை காப் பீட்டுத் தொகை வழங்கப்பட வில்லை. இதனை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாகுபடி செய்த பயிர்கள் கருகிவிட்டதால் அதிர்ச்சி யால் மரணமடைந்த, கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும் பங்களுக்கும், பயிர்பாதிப்புக்கும், வேலையிழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கும் நிவாரணத் தொகை அறிவிக்க வேண்டும். அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி குடிநீர் கிடைக் கவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.