இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான மீனவர் பிரிட்ஜோவின் படுகொலை யைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்களை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ் ணன் நேற்று சந்தித்து பேசியதாவது:
பிரதமர் மோடி இலங்கை சென்றிருந்தபோது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியபோது கூட மீனவர் பிரச்சினையை மனிதாபிமான முறையில் கையாள வேண்டும் என வலியுறுத்தினார். கடந்த நவம்பரில் நடைபெற்ற இரு நாட்டு மீனவப் பேச்சுவார்த் தையின்போது தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மீனவப் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தை மீறி இந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மீனவப் பிரச்சினைக்குத் தீர்வு காண மத்திய அரசு எத்தனை கோடி வேண்டுமானாலும் செலவு செய்யத் தயாராக உள்ளது. இதற்காக ஆழ்கடல் மீன் பிடிப்பு முறைகள் ஊக்குவிக்கப்படும். மத்திய வெளியு றவுத் துறை அமைச்சரை மீனவப் பிரநிதிகள் சந்திக்க ஏற்பாடு செய்து தருகிறேன். மீனவர்கள் தங்கள் போராட்டங்களை வாபஸ் பெற வேண்டும் என்றார்.