தமிழகம்

நோக்கியா, ஃபாக்ஸ்கான் ஆலைகளை மீண்டும் கொண்டுவர அரசு நடவடிக்கை: அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவிப்பு

செய்திப்பிரிவு

நோக்கியா, ஃபாக்ஸ்கான் தொழிற் சாலைகளை மீண்டும் கொண்டு வர தமிழக அரசு முயற்சி எடுத்து வருகிறது என்று அமைச்சர் எம். சி.சம்பத் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் எழிலரசன், ‘‘ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வந்த நோக்கியா, ஃபாக்ஸ்கான் நிறுவனங் கள் மூடப்பட்டதால் நேரடியாக 15 ஆயிரம் பேரும் மறைமுகமாக 35 ஆயிரம் பேரும் வேலை இழந் துள்ளனர். ஃபாக்ஸ்கான் நிறுவனம் தற்கா லிக உற்பத்தி நிறுத்தம் செய்துள் ளது. அந்த நிறுவனத்தை மூட, அரசின் அனுமதி பெறப்பட்டுள் ள தா? அந்த நிறுவனம் தற்போது ஆந்திர மாநிலம் தடாவில் தொ ழிற்சாலையை நடத்தி வருகிறது. மகாராஷ்டிராவில் ரூ.22 ஆயிரம் கோடியில் உற்பத்தியை தொடங்க தயாராகி வருகிறது’’ என்றார்.

இதற்கு பதிலளித்து தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் கூறியதாவது:

மத்திய அரசின் முன்தேதியிட்ட வரிச்சட்டத்தின்படி, நோக்கியா நிறுவனம் 6 ஆண்டுகளுக்கு ரூ.2,080 கோடி வரியை செலுத்தாததால் அதன் சொத்துகளை வருமான வரித்துறை முடக்கியது. இதற்கி டையே, மைக்ரோசாப்ட் நிறுவனத் துடன் நோக்கியாவை இணைக்க ஒப்பந்தம் போடப்பட்டது. வருமான வரித்துறை நடவடிக்கையால்,  பெரும்புதூரில் உள்ள நோக்கியா உற்பத்தி மையம், மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைய முடியாமல் போனது. இதனால், அந்த தொழிற்சாலை மூடப் பட்ட து. அதில் பணியாற்றிய 8 ஆயிரம் பேர் வேலை இழந்தனர்.

நோக்கியா மற்றும் ஃபாக்ஸ்கான் நிறுவனங்களை புதுப்பிப்பதற் காக மத்திய அரசு அதிகாரிகள் தைவான் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி இக்குழுவில் தமிழக தொழில்துறை செயலாளரும் பங்கேற்றார். தொழிற்சாலையை மீண்டும் தொடங்குவதற்கு பரிசீ லிப்பதாக ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார். முதல் வர் வழிகாட்டுதலின்படி, இந்த 2 தொழிற்சாலைகளை மீண்டும் தமிழகத்துக்கு கொண்டு வருவ தற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. தமிழகத்தில் இருந்து எந்த நிறுவனமும் வெளியில் செல்லவில்லை.

இவ்வாறு அமைச்சர் சம்பத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT