நன்மங்கலம், செம்பாக்கம் பகுதிகளுக்கு இடையே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை யார் அள்ளுவது என்ற எல்லைப் பிரச்சினையால் மலைபோல் குப்பைகள் தேங்கி, அப்பகுதி மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகின்றன.
செம்பாக்கம் ஜெயந்திரர் நகர் வழியாக நன்மங்கலம் செல்லும் சாலையோரத்தில் நன்மங்கலம் காப்பு காடு உள்ளது. இதன் சுற்றுச் சுவரை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் கொட்டப்படும் குப்பைகள் அப்பகுதியில் மலைபோல் குவிந் துள்ளன. முக்கிய சாலையாக இருப் பதால் இந்த வழியாக பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் செல்கின்றனர்.
குப்பைகளை நாய்கள், மாடுகள் மற்றும் பன்றிகள் மேய்ந்து கிளறுவதால், இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மழைக் காலங் களில் கடும் நாற்றமும் குப்பையை எரிப்பதால் ஏற்படும் எழும் புகை யால் சுவாசகோளாறும் ஏற்படு கிறது. அப்பகுதி மக்கள் மட்டுமல் லாமல் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.
ஆனால் குப்பைகள் அகற்றப் படாதது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் முறையிட்டால், “அந்த பகுதி தங்கள் எல்லை கட்டுப்பாட் டில் இல்லை. செம்பாக்கம் நக ராட்சி எல்லைக்குட்பட்டுள்ளதால் இதனை அவர்கள்தான் அகற்ற வேண்டும்” என தெரிவிக்கின்றனர். செம்பாக்கம் நகராட்சி நிர்வாகமோ “அங்கு நன்மங்கலம் ஊராட்சி நிர் வாகம்தான் குப்பைகளை கொட்டு கிறது. நகராட்சியில் சேகரமாகும் குப்பைகள் தினமும் சேகரிக்கப் பட்டு வேங்கடமங்கலம் கொண்டு செல்லப்படுகிறது” என்றனர்.
எல்லைப் பிரச்சினயை காரணம் காட்டி குப்பைகளை அள்ளாததால் அப்பகுதி மக்கள் தொற்று நோய் பீதியில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.