வாடிக்கையாளர்களுக்கு தரமான செல்போன் சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக 110 செல்போன் கோபுரங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
தனியார் செல்போன் நிறுவனங் களின் போட்டியை சமாளிக்கும் விதத்தில் தனது வாடிக்கை யாளர்களுக்கு தரமான செல்போன் சேவையை வழங்குவதற்காக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிதாக 110 செல்போன் கோபுரங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட் டங்களில் 2ஜி, 3ஜி சேவையை வழங்குவதற்காக இந்தக் கோபுரங் கள் வரும் மார்ச் மாதத்துக் குள் அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது. புதிய சிம்கார்டுகளை விற்பனை செய்வதற்காக பிஎஸ் என்எல் நிறுவனம் கடந்த 5 மாதங் களாக சிறப்பு மேளாக்களை நடத்தி வருகிறது. இதன் மூலம், 7 ஆயி ரம் புதிய சிம் கார்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இத் தகவலை, பிஎஸ்என்எல் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.