ராயப்பேட்டையில் தனியார் நிறுவன சுற்றுச்சுவர் இடிந்து விழுந் ததில் இளைஞர் பலியானார். பெண் உட்பட 2 பேர் காயம் அடைந்தனர்.
சென்னை ராயப்பேட்டை கவுடி யாமடம் சாலையில் ஒரு தனியார் மென்பொருள் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தை சுற்றி 40 அடி நீளம், 10 அடி உயரத்துக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் ஒரு மணியளவில் சுற்றுச்சுவ ரின் ஒரு பகுதி திடீரென்று இடிந்து விழுந்தது. இதில் சுற்றுச்சுவரின் அருகே நின்று கொண்டிருந்த 3 பேர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். இதைப் பார்த்து அருகே இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்த னர். மயிலாப்பூர், எழும்பூர், கிண்டி ஆகிய இடங்களில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு மீட்பு படையினர், இடிபாடுகளை அகற்றினர்.
இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருந்த தனசேகர்(23), கலைச் செல்வி(23), குப்பன்(60) ஆகிய 3 பேரை அவர்கள் மீட்டனர். பலத்த காயமடைந்த அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 பேரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள், தனசேகர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். குப்பன் மற்றும் கலைச்செல்விக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ராயப் பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். 10 அடி உயரமுள்ள சுற்றுச் சுவருக்கு வலுவான அடித்தளம் அமைக்காததே, அது சரிந்து விழ காரணம் என்று போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.