தமிழகம்

சிபிஐ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த சேகர் ரெட்டி, கூட்டாளிகள் மீண்டும் சிறையில் அடைப்பு: அமலாக்கத்துறை நடவடிக்கை

செய்திப்பிரிவு

சிபிஐ வழக்கில் கைது செய்யப் பட்டு ஜாமீனில் வெளியே வந்த சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் 2 பேர் அமலாக்கத்துறை அதி காரிகளால் கைது செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக் கப்பட்டனர்.

பொதுப்பணித்துறை ஒப்பந்த தாரரும், தொழிலதிபருமான சேகர் ரெட்டி, அவரது உறவினர் சீனிவாசலு ஆகியோர் வீடுகளில் கடந்த டிசம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகளும், அம லாக்கத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். சென்னை, வேலூரில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.147 கோடி, 178 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.147 கோடியில் ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ஆகும்.

புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றது குறித்து சிபிஐ வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதில், சேகர் ரெட்டி, சீனிவாசலு ஆகியோர் வங்கி அதிகாரிகளின் துணையுடன் புதிய 2 ஆயிரம் நோட்டுகளை முறை கேடாக பெற்றது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இந்திய தண் டனைச் சட்டம் 120பி, 409, 420 மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 13(2), 13(1) ஆகிய பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய் யப்பட்டது. சேகர் ரெட்டியின் ஆடிட்டர் பிரேம்குமார், கூட்டாளி கள் திண்டுக்கல் ரத்தினம், ராமச்சந்திரன் ஆகியோரும் பண மோசடிக்கு உதவி செய்திருப்பது விசாரணையில் தெரிந்தது. அதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார், ரத்தினம், ராமச்சந்திரன் ஆகிய 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு குறித்து சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக் கத்துறை ஆகிய 3 பிரிவுகளும் விசாரணை நடத்தி வருகின்றன.

சிபிஐ வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகிய 3 பேர் கடந்த 17-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில், அமலாக்கத்துறை சார்பில் சேகர் ரெட்டி, சீனிவாசலு, பிரேம்குமார் ஆகியோருக்கு ஒரு சம்மன் அனுப்பப்பட்டது. அதில், ‘மார்ச் 20-ம் தேதி கிரீம்ஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவல கத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்’ என்று கூறப்பட்டி ருந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் காலையில் அம லாக்கத்துறை அலுவலகத்தில் சேகர் ரெட்டி உட்பட 3 பேரும் ஆஜரானார்கள்.

3 பேரிடமும் காலை 11 மணிக்கு தொடங்கப்பட்ட விசாரணை இரவு 10 மணி வரை நீடித்தது. அதைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிவர்த்தனை செய்ததாக கூறி, 3 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பின்னர், எழும்பூர் 13-வது பெரு நகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். சேகர் ரெட்டி உட்பட 3 பேரையும் வருகிற 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உட்பட 3 பேரையும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் அழைத்து சென்றனர். அங்கு அவர்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்யப் பட்டன. அதைத் தொடர்ந்து சேகர் ரெட்டி உட்பட 3 பேரையும் மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர்.

சேகர் ரெட்டி உட்பட 3 பேரையும் வருகிற 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT