தமிழகம்

தமிழக சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது

செய்திப்பிரிவு

தமிழக சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. பரபரப்பான சூழ்நிலையில் தொடங்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் மணல் கொள்ளை விவகாரம் சூட்டை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், கடந்த மார்ச் 21-ம் தேதி தொடங்கி, மே 16-ம் தேதி நிறைவடைந்தது. மொத்தம் 40 நாட்களுக்கு மேல் இந்தக் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர், அவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், சட்டமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர், நாளை தொடங்குகிறது.

கூட்டத் தொடரின் முதல் நாளான நாளை, அவை கூடியவுடன் ஏற்காடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பெருமாள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அவை ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அலுவல் ஆய்வுக்குழுவை கூட்டி, அவைத்தலைவர் பி.தனபால் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பதை முடிவு செய்வார். இருப்பினும், இந்த கூட்டத்தொடர் மூன்று அல்லது நான்கு நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று தெரிகிறது.

SCROLL FOR NEXT