விதிகளை மீறி மருத்துவக் கழிவு களை அழிக்கும் மருத்துவமனை கள் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிசிஐடியின் ரகசிய அறிக்கை பசுமை தீர்ப்பாயத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் திரவ மருத் துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையங்களை அமைக்கக்கோரி திருவான்மியூரைச் சேர்ந்த ஜவஹர் லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண் டல அமர்வில் வழக்கு தொடர்ந்திருந் தார்.அதை விசாரித்த அமர்வு, மருத்துவக் கழிவுகளை மருத்துவ மனைகள் அழிக்கும் முறைகள் குறித்து ஆய்வு செய்ய, மாசுக்கட்டுப் பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டி ருந்தது. மேலும் விதிகளை மீறும் நிறுவனங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமர்வு உத்தர விட்டிருந்தது.
இந்நிலையில் இம்மனு அமர்வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில் நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிபிசிஐடியின் ரகசிய விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில், விதிகளை மீறி மருத்துவக் கழிவுகளை அழித்த 21 மருத்துவமனைகள் மீது ஏன் இதுவரை குற்ற நடவடிக்கை எடுக்கவில்லை என்று அமர்வின் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
அதனைத் தொடர்ந்து, விதிகளை மீறிய 21 மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.மனு மீதான விசா ரணை அக்டோபர் 5-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.