தமிழகம்

சென்னை சூளைமேட்டில் சீல் வைக்கப்பட்ட வீட்டில் 20 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் காய்ச்சலுடன் அவதிப்பட்ட 3 நாய்கள் மீட்பு

செய்திப்பிரிவு

சூளைமேடு செளராஷ்டிரா நகரைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கியதாகவும், அதனை திருப்பி செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் சொல்லப் படுகிறது. இதையடுத்து, அந்த நிதி நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுடன் கடந்த மாதம் 25-ம் தேதி குமார் வீட்டுக்கு வந்தனர். போலீஸாரின் உதவியுடன் அனைவரையும் வெளியேற்றிவிட்டு வீட்டுக்கு சீல் வைத்துச் சென்றனர். குமார் வளர்த்து வந்த 3 நாய்கள் மட்டும் வீட்டுக்குள் இருந்துள்ளன.

உணவு கிடைக்காமல் தினமும் பசியால் குரைத்துக் கொண்டே இருந் துள்ளன. அந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது தாயை பார்க்க வந்த குமரகுரு என்பவர், நாய்கள் சத்தம் போட்டுக் கொண்டிருப்பதை பார்த்து புளூ கிராஸ் அமைப்புக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, புளூ கிராஸ் அமைப்பு (சென்னை) பொது மேலாளர் டான் வில்லியம்ஸ் தலைமையிலான குழுவினர் நேற்று சூளைமேடு போலீஸில் தகவலை தெரிவித்துவிட்டு நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுடன் சீல் வைக்கப் பட்ட வீட்டுக்கு சென்றனர். நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சீலை உடைக்காமல் வீட்டுக்குள் சென்று 3 நாய்களையும் மீட்டு புளூ கிராஸ் அமைப்பினரிடம் கொடுத்தனர். புளூ கிராஸ் அமைப்பினர் 3 நாய்களையும் பராமரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக டான் வில்லியம்ஸ் கூறியதாவது:

நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி யதைப் போலவே, நாய்களையும் வெளியேற்றி இருக்க வேண்டும். இதனை அவர்களை செய்யவில்லை. ஒரு ஆண் நாய், 2 பெண் நாய்கள் சுமார் 20 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டுள்ளன. நாய் களுக்கு காய்ச்சலும் வந்துவிட்டது. தற்போது நாய்களுக்கு சிகிச்சை அளித்து தேவையான உணவுகளை கொடுத்திருக்கிறோம். தற்போது நாய்கள் நலமாக இருக்கின் றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT