தமிழகத்தின் வளர்ச்சிக்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக் கத்தின் மகள் டாக்டர் பிரீத்தி - டாக்டர் விக்னேஷ் திரு மணம், சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங் கில் நேற்று நடந்தது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை வகித்து திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மணமக்களை வாழ்த்தி அவர் பேசியதாவது:
எனக்கு உடல்நலம் இல்லாததால் இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க முடியுமா என்று நினைத்தேன். ஆனால், எனக்கு மனநலம் நல்லபடியே உள்ள தால் திருமணத்துக்கு வந்துள்ளேன். தமிழ் வழியில், திராவிட மரபுப்படி நடக்கும் இந்த சுயமரியாதை திருமணத்தில் பங்கேற்பது மகிழ்வாக உள்ளது.
இன்றைக்கு தந்தை பெரியாரும், அண்ணாவும் நம்மிடம் இல்லை. ஆனால், அவர்கள் விட்டுச் சென்ற கொள்கைகள், அவர்களின் பேரப் பிள்ளைகளிடம் உள் ளன. பேரப் பிள்ளைகளுக் காக உருவாக்கப்பட்ட சுயமரி யாதை இயக்கத்தை பாது காக்கும் வீரப்பிள்ளைகளாக திமுக செயல்படும். தமிழ கத்தின் வளர்ச்சிக்கு எல்லா கட்சியினரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். இவ்வாறு கருணாநிதி பேசினார்.
விழாவில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கனிமொழி எம்பி, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், திமுக தேர்தல் பணிக்குழு தலைவர் எல்.கணேசன், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தா.பாண்டியன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.