தமிழகம்

பழநியில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

செய்திப்பிரிவு

திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்ற பங்குனி உத்திரத் திருவிழாவில் ‘அரோகரா’ கோஷங் கள் முழங்க தேரோட்ட நிகழ்ச்சி நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது.

பழநியில் பங்குனி உத்திரத் திருவிழா ஏப். 3-ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் இரவு சன்னதி வீதி, கிரி வீதி களில் சுவாமி உலா நடைபெற் றது. விழாவின் 6-ம் நாளான நேற்று முன்தினம் இரவு திருக் கல்யாணமும், அதைத்தொடர்ந்து வெள்ளித் தேரோட்டமும் நடை பெற்றன.

பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு திண்டுக்கல், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கொடுமுடியில் இருந்து தீர்த்தம் எடுத்து காவடியாக சுமந்து வந்து தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டனர்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மாலை நடை பெற்றது. பாதவிநாயகர் கோயில் அருகில் இருந்து தேரோட்டம் தொடங்கியது. ஏராளமான பக்தர் கள் கலந்துகொண்டு, ‘அரோகரா’ என்ற கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கத் தொடங்கினர். தேர் மலைக் கோயிலை சுற்றியுள்ள நான்கு கிரி வீதிகளிலும் வலம் வந்து நிலையை அடைந்தது.

தேரோட்ட நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் க.ராஜமாணிக்கம், டிஐஜி கார்த்திகேயன், மாவட்ட எஸ்பி சரவணன், கந்தவிலாஸ் செல்வக்குமார், சித்தனாதன் பழனிவேலு, கண்பத் ஹோட்டல் ஹரிஹரமுத்து ஒப்பந்ததாரர் நேரு உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

பழநி பங்குனி உத்திர விழாவில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

SCROLL FOR NEXT