தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
முன்னாள் முதல்வர் ஜெயலலி தாவுக்கு ஆதரவாக தமிழகத்தில் பல் வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் நேற்று மூடப்பட்டன. ஆனால் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அமைதியாக இருந்து வருகிறார். மாநில முதல்வர் தனது கடமையை ஆற்றவில்லையெனில் 356 சட்டப் பிரிவின் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த நேரத்தில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட வேண்டும் என்று சுப்பிர மணியன் சுவாமி கோரியுள்ளார்.