தமிழகம்

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு: 7 சுயேச்சைகள் மனுக்கள் நிராகரிப்பு

செய்திப்பிரிவு

மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் வேட்பு மனுக்கள் பரி சீலனையில், 7 சுயேச்சை வேட் பாளர்களின் மனுக்கள் நிராகரிக் கப்பட்டன. அதிமுகவில் 4, திமுகவில் 2 என 6 பேர் எம்பிக்களாகின்றனர்.

தமிழகத்தில் அதிமுக 11, திமுக 4, காங்கிரஸ் 1, கம்யூனிஸ்ட்கள் சார் பில் 2 பேர் என 18 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். இவர் களில், அதிமுகவின் ஏ. நவநீதகிருஷ் ணன், பால் மனோஜ் பாண்டியன், ஏ.வில்லியம் ரபி பெர்னார்ட், திமுகவின் கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு, காங்கிரசின் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் என 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 29-ம் தேதியுடன் முடிகிறது.

இவர்கள் உட்பட நாடு முழுவதும் 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிகிறது. இப்பதவிகளுக்கு புதியவர்களை தேர்வு செய்யும் தேர்தலை சமீபத்தில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, கடந்த மாதம் 24-ம் தேதி வேட்பு மனுதாக்கல் தொடங்கியது. திமுக சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி மற்றும் அதிமுகவில் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், நவநீத கிருஷ்ணன், ஆர்.வைத்திலிங்கம், விஜயகுமார் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்தனர்.

இவர்களைத் தவிர, பா.இசக்கி முத்து, கே.குமார், ச.சாந்தகுமாரி, மங்கூன் ந.நடராஜன், கே.பத்ம ராஜன், கோ.மதிவாணன், அக்னி ஸ்ரீராமச்சந்திரன் என 7 பேர் சுயேச்சை களாக மனுதாக்கல் செய்தனர்.

வேட்பு மனுதாக்கல் நேற்று முன்தினம் மாலை 3 மணியுடன் முடிந்தது. இறுதியாக 13 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். தொடர்ந்து, நேற்று மனுக்கள் பரிசீலனை காலை 11 மணிக்கு தொடங்கியது. மனுக்கள் பரிசீலனை முடிவில், 6 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சட்டப்பேரவை செயலாளர் அ.மு.பி. ஜமாலுதீன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திமுகவின் டி.கே.எஸ்.இளங் கோவன், ஆர்.எஸ்.பாரதி, அதிமுகவின் அ.நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன், அ.விஜயகுமார், ஆர்.வைத்தி லிங்கம் ஆகிய 6 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் செல்லத்தக்கவை.

பா.இசக்கிமுத்து, கே.குமார், ச.சாந்தகுமாரி, மங்கூன் ந.நடராஜன், கே.பத்மராஜன், கோ.மதிவாணன், அக்னி  ராமச்சந்தின் ஆகிய 7 வேட்பாளர்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

6 பேரும் தேர்வு

வேட்பு மனுக்கள் பரிசீலைனை நேற்றுடன் முடிந்துள்ளது. நாளை மாலை 3 மணி வரை மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதற்கான காலக்கெடுவாகும். யாரும் மனுவை திரும்ப பெறாவிட்டால், 6 மாநிலங்களவை பதவிக்கும், மனுக்கள் தாக்கல் செய்துள்ள 6 பேரும் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இந்த வகையில், அதிமுக வேட்பாளர்கள் 4 பேர், திமுக வேட்பாளர்கள் 2 பேரும், மாநிலங்களவை உறுப்பினர் களாகின்றனர். இதன் மூலம் மாநிலங்களவையில் அதிமுகவின் பலம் தமிழகத்தில் 12, புதுச்சேரியில் 1 என 13 ஆக உயர்கிறது.

SCROLL FOR NEXT