நோயாளிகளின் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து சிகிச்சை அளிக்கும் மேலாண்மை திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைகளிலும் விரைவில் செயல் படுத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
மருத்துவமனை மேலாண்மைத் திட்டத்தின்படி நோயாளிகளின் விவரங்கள் முழுவதும் கம்ப்யூட்ட ரில் பதிவு செய்யப்படும். இதற்காக சோதனை முறையில் கடந்த 2008-ம் ஆண்டு தாம்பரம், சோளிங்கர், ஸ்ரீபெரும்புதூர், குளச்சல், பத்மநாப புரம் ஆகிய அரசு மருத்துவமனைகளில் கணினிமயமாக்கல் முறை செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங் களில் உள்ள அரசு மருத்துவமனை களில் இத்திட்டம் கொண்டுவரப் பட்டது.
இரண்டாம் கட்டமாக மீத முள்ள 222 அரசு மருத்துவமனை களுக்கு திட்டம் விரிவுபடுத்தப்பட் டது. மேல்சிகிச்சைக்காக பெரும் பாலும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளுக்குத்தான் மக்கள் செல்கின்றனர். இதனால் தற்போது மூன்றாம் கட்டமாக மருத்து வக் கல்வி இயக்கக கட்டுப்பாட்டில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஒரு அரசு பல் மருத் துவக் கல்லூரி உள்பட 45 அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்து வப் பல்கலைக்கழகத்துக்கு இத்திட் டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், மருத்து வக் கல்வி இயக்குநர் (பொறுப்பு) வி.கனகசபை மற்றும் சுகாதார திட்ட மருத்துவ அதிகாரி சமந்தா ஆகியோர் கூறியதாவது:
அரசு மருத்துவமனை புறநோயா ளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு புறநோயாளிச் சீட்டு கையால் எழுதிக் கொடுக்கப் பட்டு வந்தது. ஆனால், மருத்துவ மனை மேலாண்மை திட்டத்தின் மூலம் நோயாளியின் பெயர், வயது, முகவரி மற்றும் நோய் பற்றிய அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து நோயாளிக்கு அடையாள குறியீடு எண்ணுடன் சீட்டு வழங்கப்படுகிறது.
டாக்டரிடம் சென்று தங்களுடைய எண்ணை தெரிவித்தால்போதும், கம்ப்யூட்டரைப் பார்த்து அவருக்கு என்ன பிரச்சினை என்பதை டாக்டர்கள் தெரிந்து கொள்வர். அதேபோல, மருந்தகத்தில் சென்று எண்ணை மட்டும் தெரிவித்தால் மருந்து, மாத்திரைகள் வழங்கப் படும்.
இந்த திட்டம் அனைத்து அரசு மருத்துவமனைகளுடன் இணைக் கப்படுகிறது. ஒரு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளி, மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு செல்லும்போது, தங்களுடைய குறியீட்டு எண்ணைத் தெரிவித்தால் போதும். இதுவரை அவருக்கு என்ன நோய், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது என்பது பற்றிய அனைத்து விவரங்களையும் டாக்டர்கள் தெரிந்து கொள்ள முடியும்.
அதன் பின், நோயாளிக்கு மேல் சிகிச்சையை டாக்டர்கள் எளிதாக அளிக்கலாம். இந்த திட்டம் அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவமனைகள் தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் வெற்றிகர மாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.