தமிழகம்

விவசாயிகளுக்கான அறிவிப்பு இல்லை: ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிக்கிறது - ராமதாஸ், ஜி.கே.வாசன் கருத்து

செய்திப்பிரிவு

ஆளுநரின் உரை ஏமாற்றம் அளிக் கிறது என்று பாமக நிறுவனர் ராம தாஸ், தமாகா தலைவர் ஜி.கே, .வாசன் ஆகியோர் தெரிவித் துள்ளனர்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

மக்களுக்கு பயனுள்ள அறிவிப்பு கள் இல்லாத தமிழக ஆளுநரின் உரை மிகவும் ஏமாற்றம் அளிக் கிறது. வறட்சியால் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளும், அவற்றை தாங் கிக்கொள்ள முடியாமல் விவ சாயிகள் அதிர்ச்சியிலும், தற் கொலை செய்தும் உயிரிழந்து வருவதுதான் தமிழகத்தின் தலை யாய பிரச்சினையாக இருக்கிறது. விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், பொருளாதார இழப்புகளையும் சரி செய்வதன் மூலம்தான் விவசாயிகளின் தற்கொலையை தடுக்க முடியும். அதற்காக பயிர்க்கடன் தள்ளுபடி, சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குதல், உழவுத் தொழிலாளர்களுக்கு ஒரு முறை இழப்பீடு வழங்குதல் ஆகியவை எப்போது வழங்கப் படும் என்பது குறித்த அறிவிப்பு கள் ஆளுநர் உரையில் இடம் பெறவில்லை.

மருத்துவ நுழைவுத் தேர்வு குறித்தும் உறுதியான, தெளிவான அறிவிப்பு எதுவும் இல்லை. ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தக் கோரி மாணவர்கள் அறவழிப் போராட்டம் நடத்தியதாகவும், அவர் களால்தான் அவசரச் சட்டம் சாத் தியமானதாகவும் ஒருபுறம் பாராட்டிவிட்டு, மறுபுறம் அறவழி யில் போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியது எந்த வகை யில் நியாயம் என்பதை ஆளுநரும், அரசும்தான் விளக்க வேண்டும்.

மொத்தத்தில் ஆளுநர் உரை வெற்று அறிவிப்புகள் மட்டுமே நிறைந்த வீண் சடங்கா கத்தான் உள்ளது. தமிழகத்தில் அதிமுக அரசு செயல்படாத அரசு என்பதற்கு ஆளுநர் உரை இன்னொரு உதாரணம்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

தமிழகத்தில் நிலவும் வரலாறு காணாத வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயி களுக்கு பயிர்க் கடன் தள்ளுபடி, உயிரிழந்துள்ள 200-க்கும் மேற் பட்ட விவசாயிகளுக்கான நஷ்டஈடு, வார்தா புயல் நிவாரணம் போன் றவை குறித்து ஆளுநர் உரையில் எந்த அறிவிப்புகளும் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. விவசாயிகள், பொதுமக்கள் எதிர்பார்த்த வகையில் ஆளுநர் உரை அமையவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

SCROLL FOR NEXT