தமிழகம்

விவசாயத்தையும், விவசாயிகளையும் பாதுகாக்க கோரிக்கை: சென்னையில் மார்க்சிஸ்ட் மறியல் போராட்டம் - நூற்றுக்கணக்கானோர் கைதாகி விடுதலை

செய்திப்பிரிவு

விவசாயத்தையும், விவசாயிகளை யும் பாதுகாக்கக் கோரி சென்னை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அண்ணா சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வறட்சியால் வரலாறு கண்டிராத அளவுக்கு தமிழகத் தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலை யில் வறட்சி காரணமாக தமிழ கத்தில் இறந்துபோன 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் குடும்பங் களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும், ஏக்கர் நெல்லுக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், வாழைக்கு ரூ.75 ஆயிரம், மஞ்சளுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 7-ம் தேதி நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெறும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.

அதன்படி மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று காலை 10 மணியளவில் கூடினர். கையில் கொடியுடனும், பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகை களை கையில் ஏந்தியபடியும், மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் ஆர்.சவுந்தர்ராஜன் தலைமையில் அண்ணா சாலை யில் மறியல் போராட்டம் நடை பெற்றது.

இப்போராட்டத்தில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தென் சென்னை மாவட்ட செயலாளர் ஏ.பாக்கியம், முன்னாள் எம்.எல்.ஏ. வும், மாநிலக் குழு உறுப்பினரு மான பீம்ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் மறியல் போராட்டத்தால் அண்ணா சாலை யில் சுமார் 10 நிமிடம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து பஸ்களில் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுவிக் கப்பட்டனர்.

தமிழகம் பாலைவனம் ஆவதை மத்திய அரசு தடுக்க காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். வறட்சியால் செத்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களை பாதுகாக்க உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.15 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 200 நாட்கள் வேலையும், கூலியாக ரூ.400-ம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இப்போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

SCROLL FOR NEXT