தமிழகம்

எஸ்எம்எஸ் அனுப்பினால் ஆட்டோ சேவை

செய்திப்பிரிவு

ஒரு குறிப்பிட்ட தொலைபேசியில் அழைத்தால் வரும் "கால் ஆட்டோ" சேவையைத் தொடர்ந்து குறுந்தகவல் அனுப்பினால், ஆட்டோ சேவையைப் பெறுவதற்கான திட்டம், சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சேவையைப் பெற வாடிக்கையாளர்கள், 45554666 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். அதன்பின்னர், அவர்கள் தரும் எண்ணுக்கு, தங்கள் இருப்பிட பின்கோடு, சேர வேண்டிய இடம் ஆகியவற்றுடன் ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால், அருகில் உள்ள 5 ஆட்டோ ஓட்டுநர்கள் பற்றிய தகவல்கள், அவர்களது செல்போன் எண்களுடன் அனுப்பி வைக்கப்படும்.

அவர்களை உடனே தொடர்பு கொண்டு சேவையை பெறலாம். இந்த சேவையைப் பெற ரூ.10 மட்டும் கூடுதலாக செலுத்தினால் போதும்.

சென்னை நகர ஆட்டோக்களில் இந்த சேவையைப் பெற முடியும். இந்த சேவையின் கீழ் இணைத்துக் கொண்டுள்ள ஆட்டோக்களில், சேவை பற்றிய ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும்.

SCROLL FOR NEXT