ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று அதிமுக (அம்மா) கட்சி வேட் பாளர் டி.டி.வி.தினகரன் நம் பிக்கை தெரிவித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகு திக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான நேற்று அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் டி.டி.வி.தினகரன் தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொப்பி சின்னத்தைக் குறிக்கும் வகையில் தொப்பி அணிந்து வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் டி.டி.வி.தினகரன் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வின் வேட்பாளராகிய நான், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தொப்பி சின்னத் திலே போட்டியிடுகின்றேன். எம்.ஜி.ஆர்.கண்ட இயக்கமாகிய அதிமுகவின் வேட்பாளராக இத் தொகுதியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வென் றார். நான் இந்தமுறை தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறேன். பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் நான் நிச்சயம் வெற்றி பெறுவேன்.
இத்தொகுதியை இந்தியா விலே முன்மாதிரியான தொகுதி யாக மாற்றிக்காட்டுவதாக முதல் வர் ஜெயலலிதா உறுதி அளித் துள்ளார். அவரது உறுதியை, கனவை நிச்சயம் நிறைவேற்றித் தருவேன் என்று உறுதிமொழியை இத்தொகுதி மக்களுக்குத் தெரி வித்துக் கொள்கிறேன். அடுத்த தேர் தலுக்குள் ஜெயலலிதா அளித்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றித் தருவேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தொகுதியின் உறுப்பினராக இருந்த முதல்வர் ஜெயலலிதா, பல்வேறு வளர்ச்சித் திட்டங் களை, மக்கள் நலத்திட்டங்களை, அடிப்படைத் தேவைகளை சிறப் பாக செய்து கொடுத்திருக்கிறார்.
இரட்டை இலை சின்னம், எதனால், எந்த சதியால், யாரால் முடக்கப்பட்டது என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, இந்திய மக்களுக்கே நன்றாகத் தெரியும். இந்த சதியை முறியடித்து மீண்டும் இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுப்போம். இத்தேர்தலில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மீண்டும் ஏப்ரல் மாதத்தில் அதிமுகவின் சின்னத்தை, எம்.ஜி.ஆர். கண்ட அந்த வெற்றிச் சின்னத்தை ஒன்றரை கோடி தொண்டர்களோடு சேர்ந்து நான் நிச்சயம் மீட்டுக் காட்டுவேன் என்றார் டி.டி.வி.தினகரன்.