தமிழகம்

சென்னையில் பூமிக்கடியில் மின் கம்பிகளை பதிக்க நடவடிக்கை: அமைச்சர் தங்கமணி தகவல்

செய்திப்பிரிவு

சென்னை மாநகரில் மின் கம்பி களை பூமிக்கடியில் பதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று கேள்விநேரம் முடிந்ததும் திமுக உறுப்பினர் பி.கே.சேகர்பாபு கொண்டு வந்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உயர் அழுத்த மின் கம்பிகள் வெளியில் இருப்பதால் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

சென்னை மாநகராட்சி பகுதி களில் மின் கம்பிகளை பூமிக்கடியில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையைப் பொறுத்தவரை மெட்ரோ ரயில், குடிநீர் பணிகள், தொலைபேசி கேபிள்கள் அமைப் பது உள்ளிட்ட பல்வேறு காரணங் களுக்காக சாலைகள் தோண்டப் படும்போது மின் கம்பிகள் சேதம் அடைகின்றன. இது போன்ற சூழ் நிலைகளில் மின்தடை ஏற்படும் போது உடனடியாக மின்சாரம் வழங்குவதற்காக தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

மின்கம்பிகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பணிகள் மேற்கொள்ளும்போது மின்வாரி யத்துக்கு தகவல் தெரிவிக்குமாறு மற்ற துறைகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT