தமிழகம்

கூடங்குளத்தில் உற்பத்தி செய்யப்படவுள்ள 2 ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கு தர வேண்டும்: மத்திய மின்துறை அமைச்சரிடம் தங்கமணி கோரிக்கை

செய்திப்பிரிவு

கூடங்குளம் அணுமின் திட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகளில் உற்பத்தியாகவுள்ள 2000 மெகாவாட் மின்சாரத்தையும் தமிழகத்துக்கே ஒதுக்கீடு செய்ய வேண்டும் என மாநில மின்துறை அமைச்சர் தங்கமணி, மத்திய மின்துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி, டெல்லியில் நேற்று மத்திய மின்சாரம், நிலக்கரி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் சுரங்கங்கள் துறை அமைச் சர் (தனிப்பொறுப்பு) பியூஸ் கோயலை சந்தித்தார். அப்போது, உதய் திட்டத்தை செயல்படுத்துவது மற்றும் மின்வாரியத்தின் நிதிச் சுமையை ஏற்றுக் கொள்வதற்காக மாநில அரசு வெளியிடும் கடன் பத் திரங்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.

2000 மெகாவாட் மொத்த திறன் கொண்ட கூடங்குளம் அணுமின் திட்டத்தின் மூன்றாவது மற்றும் நான்காவது அலகுகளுக்கான பணி களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ள நிலையில், மேற்கண்ட அலகு களில் உற்பத்தியாகவுள்ள மொத்த உற்பத்தி திறனான 2000 மெகா வாட்டையும் தமிழகத்துக்கே ஒதுக் கீடு செய்யவேண்டும். தமிழ்நாட் டிலிருந்து கிடைக்கும் உபரி காற் றாலை மின்சாரத்தை தேவைப்படும் மாநிலங்களுக்கு விற்பதற்கு ஏது வாக தனிப்பயன் பசுமை மின் வழித்தடத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அண்மையில் வீசிய வார்தா புயல் காரணமாக சென்னையில் உள்ள மின் கட்டமைப்பு மிகவும் சேதமடைந் ததால், அதை உடனடியாக மறு சீர மைக்க ரூ.1093.27 கோடி கோரப் பட்டது. மேலும், சென்னை நகரம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப் படக் கூடிய நிலையில் இருப்பதால் மேல்நிலை மின் பாதைகளை பூமிக் கடியில் புதைவடங்களாக மாற்றும் பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.17 ஆயிரம் கோடி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இத்தொகையை மானியமாகவோ பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மூலம் கடனாகவோ அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பின்போது, தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எம்.சாய்குமார் உடனிருந்தார்.

SCROLL FOR NEXT