தமிழகம்

ரஜினி மகள் கார் ஆட்டோ மீது மோதல்: தனுஷ் சமரசம்

செய்திப்பிரிவு

ஆழ்வார்பேட்டையில் நடிகர் ரஜினியின் இளைய மகள் ஓட்டி வந்த கார் ஆட்டோ மீது மோதி யதில் ஓட்டுநர் காயம் அடைந்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. இவர் நேற்று காலை 4.30 மணியளவில் ஆழ்வார் பேட்டை மவுபரீஸ் சாலை வழியாக காரை ஓட்டி வந்தார். அப்போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது கார் மோதிவிட்டது. இதில் ஆட்டோவில் தூங்கிக் கொண்டிருந்த அதன் ஓட்டுநர் மணி லேசான காயம் அடைந்தார். விபத்தால் பதற்றம் அடைந்த சவுந்தர்யா, உடனே தனது அக்கா ஐஸ்வர்யாவின் கணவர் நடிகர் தனுஷை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவித்தார்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தனுஷ், விபத்தில் சேதம் அடைந்த ஆட்டோவை சரிசெய் வதற்கும், காயம் பட்ட மணியின் மருத்துவ செலவுக்கும் பணம் கொடுத்து பிரச்சினையை முடித்து வைத்துள்ளார். அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் யாரும் அதிகம் கூடவில்லை. இதனால் பிரச்சினை சுமுகமாக முடிந்துள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT