ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்தது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் ஆணையர்கள் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர். டிடிவி தினகரனை தகுதி நீக்கம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று வாக்குப்பதிவு நடக்க இருந்த நிலையில், கடந்த 9-ம் தேதி இரவு தேர்தலை ஆணையம் ரத்து செய்தது. குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பிறகு வேறு ஏதேனும் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடந்தால் அத்துடன் சேர்த்து ஆர்.கே.நகருக்கும் தேர்தல் நடத்தப்படலாம்.
அதிகப்படியான பார்வையா ளர்கள், சிறப்பு தேர்தல் அதிகாரி, நுண்பார்வையாளர்கள், மத்திய அரசு ஊழியர்கள், துணை ராணுவ பாதுகாப்பு என பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்தபோதும் ஆர்.கே.நகரில் தேர்தலை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட் டது தொடர்பாக தேர்தல் ஆணை யம் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.
இதற்கிடையே, பணப் பட்டு வாடா தொடர்பாக வருமான வரித் துறையின் முழுமையான அறிக் கையை கோரியுள்ளது. வருமான வரித் துறையினர் சோதனையை முடித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய பின், இது தொடர்பான அறிக்கையை அளிக்க உள்ளனர். அதைக் கொண்டு, ஆர்.கே.நகரில் பணப் பட்டுவாடா செய்யப்பட்ட விவகா ரத்தில் அடுத்தகட்ட நடவடிக் கையை ஆணையம் எடுக்க உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ரூ.28 லட்சம் மட்டுமே செலவழிக்க வேண்டும். இதன் அடிப்படையில் வாக்காளர் களுக்கு கொடுக்கும்போது கைப்பற்றப்பட்ட பணம், பொருட் களின் மதிப்பு ஆகியவை கணக் கிடப்படும். இவற்றுடன், வேட்பா ளர் ஏற்கெனவே செலவழித்த தொகை சேர்த்து ரூ.28 லட்சத்துக்கு அதிகமாக இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்காக செலவின பார்வை யாளர்கள் அறிக்கையை ஆணை யம் கேட்டுள்ளது. செலவுக் கணக்கை ஒப்பிட்டுப் பார்த்த பிறகு சம்பந்தப்பட்ட வேட்பாளரிடம் விளக்கம் கேட்கப்படும். இந்த வகையில் வேட்பாளர் டிடிவி தினகரனிடம் விளக்கம் கேட்கப்பட லாம். அவர் விளக்கம் அளித்து, ஆணையத்துக்கு திருப்தி ஏற் படாத பட்சத்தில், அடுத்தகட்டமாக ஆவணங்கள் அடிப்படையில் அவரை தகுதி நீக்கம் செய்வதற் கான நடவடிக்கையை ஆணையம் எடுக்கும்.
இதற்கிடையே, வரும் 17-ம் தேதி இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் ஆணையம் முடிவெடுக்க உள் ளது. அதில் ஒருவேளை சசிகலா நியமனம் செல்லாது என ஆணை யம் தீர்ப்பளித்தால், தினகரனின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பே செல்லாததாகிவிடும். அதைத் தொடர்ந்து, துணைப் பொதுச்செயலாளர் பதவி மற்றும் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் என அனைத்தும் கேள்விக்குறி யாகிவிடும். எனவே, 17-ம் தேதி நடக்கும் விசாரணை, பணப் பட்டுவாடா மீது எடுக்கப்பட வேண் டிய நடவடிக்கைகள் தொடர் பாக தேர்தல் ஆணையர்கள் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.