தட்டச்சு, சுருக்கெழுத்து, கணக்கியல் ஆகிய அரசு தொழில்நுட்பவியல் பாடத்தேர்வுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டன.
இந்த தேர்வுகளின் முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் வெளியிடப்படுகின்றன.
தேர்வு முடிவுகளை www.tndte.com என்ற இணையதளத்திலும் தெரிந்துகொள்ளலாம் என்று தொழில்நுட்ப கல்வி ஆணையரும், தேர்வு வாரியத்தின் தலைவருமான குமார் ஜெயந்த் தெரிவித்துள்ளார்.