தமிழகம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும்: முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தவறான கொள்கைகள் அடிப் படையிலான பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசை முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள் ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எண்ணெய் நிறுவனங்கள் 16-ம் தேதி முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 காசு, டீசலுக்கு ரூ.1.34 என்ற அளவில் உயர்த்தியுள்ளன. உலக சந்தைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிக்கும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது முதல், மாதம் இருமுறை விலை மாற்றி அமைக்கப்படுகிறது.

விலை உயர்த்தப்படும்போது, உலக சந்தையில் பெட்ரோல், டீசல் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை காரணமாக தெரிவிக்கின்றன. தற்போதும் இந்தக் காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எண் ணெய் நிறுவனங்கள் இந்தியா வில் எடுக்கப்படும் கச்சா எண் ணெயை சுத்திகரித்து பெட்ரோ லியப் பொருட்களை தயாரிக்கின் றன. தேவையான அளவு மட் டுமே கச்சா எண்ணெய் இறக்கு மதி செய்கின்றன.

இந்தச் சூழலில், உலக சந்தை யில் பெட்ரோல், டீசலுக்கு நிலவும் விலையை அடிப்படையாக வைத்து உள்ளூர் விலையை நிர்ணயிப்பது தவறான விலை நிர்ணயக் கொள்கை ஆகும். இதை ஏற்கெனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளேன்.

மத்திய அரசு கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் முதல் பல தவணைகளில் பெட்ரோலுக்கு ரூ.11.77, டீசலுக்கு ரூ.13.57 என்ற அளவுகளில் கலால் வரியை உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணை விலை சரிந்தபோது அதன் முழுப்பயன் மக்களை சென்றடையவிடாமல், கலால் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக சரக்கு கட்ட ணங்கள் அதிகரிக்கும். அத்தியா வசியப் பொருட்களின் விலை உயர வழி ஏற்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும். எனவே, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT