தமிழகம்

கூட்டுறவு கடன் தள்ளுபடி பெற்றவர்கள் பட்டியல்: விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் - அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விளக்கம்

செய்திப்பிரிவு

கூட்டுறவு கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பட்டியல் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று உணவு, கூட்டுறவுத்துறை மானி யக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது இதுகுறித்து நடைபெற்ற விவாதம்:

திமுக உறுப்பினர் கே.சுந்தர் (உத்திரமேரூர்):

கடந்த திமுக ஆட்சியில் அனைத்து விவசாயி களின் கூட்டுறவுக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. ஒரு வாரத்தில் அரசாணை வெளி யிடப்பட்டு உடனடியாக கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், தற்போது முதல்வர் அறிவித்த 2 மாதங்களுக்குப் பிறகே அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் கடன் தள்ளுபடி சான்றிதழ் வழங்கப்படவில்லை. குறு, சிறு விவசாயிகள் மட்டுமல்லாது அனைத்து விவசாயி களின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ:

கடந்த திமுக ஆட்சியில் கூட்டுறவு கடன் தள்ளுபடி நடவடிக்கைகள் தொடங்க 53 நாள்கள் ஆனது. ஆனால், தற்போது 28 நாள் களில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட கடன் தள்ளுபடியால் விவசாயிகள் பயன் அடையவில்லை.

ஆனால், தற்போது பாதிக் கப்பட்ட விவசாயிகள் பயன் பெறும் வகையில் குறு, சிறு விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின்:

ஆளுநர் உரை மீதான விவாதத்தில் நான் பேசும்போது, கூட்டுறவு கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் பட்டியலை உடனுக்குடன் இணையதளத்தில் வெளியிட்டால் நாங்களும் கேள்வி கேட்க வேண்டிய அவசியம் இல்லை. அமைச்சர்களும் விளக்கம் அளிக்க வேண்டிய தேவை இருக்காது என்றேன். ஆனாலும் இதுவரை இணையதளத்தில் வெளியிட வில்லை. கடன் தள்ளுபடி பெற் றோர் விவரங்கள் எப்போது இணையதளத்தில் வெளியிடப் படும்?

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ:

இணையதளத்தில் வெளியிடு வதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை உடனடியாக செய்ய முடியாது. இதில் எந்தத் தவறும் நேர்ந்து விடக் கூடாது என்பதற்காக மிக கவனமாக செயல்பட்டு வருகிறோம்.

கூட்டத் தொடர் முடிவதற்குள்..

கடன் தள்ளுபடி பெற்ற விவசாயிகளின் விவரங்கள் விரை வில் இணையதளத்தில் வெளி யிடப்படும். இந்தக் கூட்டத் தொடர் முடிவதற்குள்ளாகவே இதனை நீங்கள் இணையதளத்தில் பார்க்க முடியும்.

இவ்வாறு விவாதம் நடை பெற்றது.

SCROLL FOR NEXT