தமிழகம்

கருணாநிதி தலைமையில் இன்று திமுக பொதுக்குழுக் கூட்டம்: ஸ்டாலின் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு

செய்திப்பிரிவு

கருணாநிதி தலைமையில் திமுக பொதுக்குழுக் கூட்டம் சென்னை யில் இன்று (ஜனவரி 4) நடைபெறு கிறது. கருணாநிதி உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மு.க.ஸ்டா லின், கட்சியின் செயல் தலை வராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப் பிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணைய விதியின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை கட்சியின் பொதுக் குழுவைக் கூட்ட வேண்டும். அதன்படி, திமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த மாதம் 20-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டது. அப்போது திமுக தலைவர் கருணாநிதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதை யடுத்து திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைக்கப்பட் டது. பின்னர், கருணாநிதி உடல் நலம் பெற்று 23-ம் தேதி வீடு திரும்பினார்.

இந்நிலையில், திமுக பொதுக் குழுக் கூட்டம் ஜனவரி 4-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். அதன்படி, திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 9 மணிக்கு அண்ணா அறிவாலயத் தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெறுகிறது. திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன், பொருளாளர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற் கின்றனர்.

இக்கூட்டத்தில், கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்ப தாகக் கூறப்படுகிறது. இதனால் திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும், இக்கூட்டத்தில் கட்சி யின் ஆக்கப்பணிகள் மற்றும் தணிக்கைக்குழு அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ். இளங் கோவன் கூறுகையில், ‘‘இந்தக் கூட்டத்தில் கருணாநிதி கலந்து கொள்வார் என்று நம்புகிறோம். இருப்பினும் மருத்துவர் ஆலோ சனைப்படியே அவர் கலந்து கொள்வது பற்றி முடிவு செய்யப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT