தமிழகம்

மக்களின் பெரும் வரவேற்பால் ‘அம்மா வாய்ஸ்’ சேவை நிறுத்தம்

செய்திப்பிரிவு

பொதுமக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றிருந்த அதிமுக இணையதளத்தின் “அம்மா வாய்ஸ்” சேவை திடீரென நிறுத்தப் பட்டுள்ளது. அந்த எண்ணுக்கு கட்டுக்கடங்காமல் அதிக அழைப்புகள் வந்ததால் அதைக் கையாள முடியாமல் தொடர்புடைய நிறுவனம் அச்சேவையை நிறுத்தி யது தெரியவந்துள்ளது

தேர்தல் நெருங்கி வரும்நிலையில் வாக்காளர்களைக் கவர புதுப்புது சேவைகளைத் தங்கள் இணையதளங்களில் அரசியல் கட்சிகள் அறிமுகம் செய்துவருகின்றன.

டயல் செய்தால் (9543778899) முதல்வரின் பேச்சுகளைக் கேட்க லாம் (அம்மா வாய்ஸ்) என்ற சேவையைக் கடந்த புதன்கிழமை அதிமுக அறிமுகப் படுத்தியது. அந்த வசதியைப் பயன்படுத்தி ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர், முதல்வரின் பேச்சுகளைக் கேட்ட னர். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததால் 6 நாட்களில் அழைப்புகளின் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியது.

ஆனால், அந்த தொலைபேசி சேவையை வழங்கிய ரிலையன்ஸ் நிறுவனம், திடீரென அந்த சேவையை ரத்து செய்துள்ளது. அதிமுக-வுக்காக இந்த வசதியை ஏற்படுத்த உதவிபுரிந்த தனியார் தொழில்நுட்ப நிறுவனமான “வாய்ஸ்நாப்”-க்கு கூட தெரிவிக் காமல் அந்த சேவையை ரிலை யன்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டதாக அதிமுகவினர் தெரிவித்தனர்.

1 மணி நேரத்தில் 8 லட்சம் பேர்

இது குறித்து வாய்ஸ்நாப் நிறுவனத்தின் இயக்குநர் கணேஷ் பத்மநாபன் கூறுகையில், “அம்மா வாய்ஸ் சேவையைப் பெற ஒரு மணி நேரத்தில் 8 லட்சம் பேர் முயற்சித்ததால் ரிலை யன்ஸ் தொலைத்தொடர்பு கட்ட மைப்பே சீர்குலையும் நிலை ஏற்பட்டுவிட்டது.இதனால் அந்த சேவையை ரத்து செய்ததாக விளக்கம் அளித்துள்ளனர்” என்றார். இதுதொடர்பாக வாய்ஸ் நாப்புக்கு, ரிலையன்ஸ் நிறு வனம் கடிதம் எழுதியுள்ளது. அதில், ”உங்களுக்கு ஒதுக்கப் பட்ட சேவைக்கு எண்ணிலடங்கா அழைப்புகள் தொடர்ந்து வந்தபடி உள்ளன.

இதனால் எங்களது முக்கிய வாடிக்கையாளர்களுக்கான சேவையை முறையாக வழங்க முடியவில்லை. அவர்கள் தொலைத்தொடர்புத்துறையிடம் புகார் அளித்ததால், இந்த சேவையை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் உங்கள் மொபைல் எண்ணுக்கு வழங்கி வந்த சேவையை நிறுத்திக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.

“நீங்கள் மீண்டும் இந்த சேவையைத் தொடர விரும்பினால், வழக்கத்துக்கு முரணாக தொடர்ந்து அழைப்புகள் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்” என்றும் நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், தங்களுக்கு வந்த புகார்கள் பற்றியோ, தொலைத் தொடர்புத் துறையின் உத்தர வினையோ அவர்கள் காண்பிக்க வில்லை என்றும் அதிமுக-வினர் கூறுகின்றனர்.

SCROLL FOR NEXT