தமிழகம்

ஜெ. ஜாமீன் மறுப்பால் காஞ்சியில் கல்வீச்சு, கடையடைப்பு

செய்திப்பிரிவு

கர்நாடக சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், காஞ்சியில் அதிமுவினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகரின் முக்கிய சாலைகளில் உள்ள கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.

சொத்துக் குவிப்பு வழக்கில் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம் பகுதியில் ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மூடப்படாத கடைகள் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், மேட்டுத்தெரு, காமராஜர் சாலை, ரயில்வே சாலை மற்றும் பிரதான மார்கெட் பகுதியில் உள்ள கடைகள் அடைக் கப்பட்டன. கல்வீச்சில் 3 கடைகள் சேதமடைந் தன. முக்கிய வீதிகளில் அதிமுவினர் ஊர்வல மாக சென்றதால் நகரில் பரபரப்பு ஏற் பட்டது. பாதுகாப்பு கருதி நகரின் முக்கிய பகுதிகளில் அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. அசம்பாவிதங்களை தடுக் கும் வகையில் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

காஞ்சிபுரம் காந்தி சாலையில் மூடப்பட்ட கடைகள்.

SCROLL FOR NEXT