தமிழகம்

ஜெயலலிதா, கருணாநிதியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

செய்திப்பிரிவு

ஆந்திர மாநில பிரிவினையில் இருதரப்பு மக்களின் நியாயத் தையும் கேட்காமலேயே அரசியல் லாபத்துக்காக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது எனக் கூறி, அக்கட்சிக்கு எதிராக ஆதரவு திரட்டுவதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா மசோதாவை நிறைவேற்றக்கூடாது என்று கூறி சீமாந்திரா பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பிரிவினை தொடர்பான மசோதாவை அவசரமாக நிறைவேற்றக் கூடாது என்று அவர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரை சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை காலை சந்தித்து ஆதரவு திரட்டினார்.

SCROLL FOR NEXT