கேரளாவில் இருந்து புதுமண தம்பதியோடு உறவினர்கள் வேளாங்கண்ணி சென்றுவிட்டு, காரில் கேரளா திரும்பியபோது குளித்தலை அருகே லாரி மீது கார் மோதியதில் புதுமாப்பிள்ளை உட்பட 7 பேர் பரிதாபமாக பலியாகினர்.
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் (29). இவருக்கும் அதே பகுதி யைச் சேர்ந்த பிரேமாவுக்கும் கடந்த 6-ம் தேதி கேரளாவில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, திருமண வீட்டார் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த உறவினர்கள் என 11 பேர் வேளாங்கண்ணி கோயிலுக்கு சென்றுவிட்டு, காசர்கோடுக்கு காரில் நேற்று திரும்பிக்கொண்டு இருந்தனர். காரை ரோஹித்(22) ஓட்டினார்.
கரூர் மாவட்டம் குளித் தலையை அடுத்து உள்ள திம்மாச்சிபுரம் அருகே வந்த போது, கரூரில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற லாரி மீது எதிர் பாராதவிதமாக கார் மோதியது. இதில், அந்த இடத்திலேயே கார் ஓட்டுநர் ரோஹித், ஹெரால்டு பெஞ்சமின்(52), சாண்டிரின்(40), அவரது மகள் சனானோ(10), ரீமா(30) ஆகிய 5 பேர் உயிரிழந் தனர்.
படுகாயமடைந்து மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லும் வழியில் ஆல்வின், பிரெசில்லா (45) ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். ஜெஸ்மா(29), பிரேமா(25), சண்வின் ஆகியோர் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ரோஷன் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார். இவரும், காரை ஓட்டிவந்த ரோஹித்தும் இரட்டையர்கள். லாரியின் பின்னால் மொபெட்டில் சென்ற அப்பகுதியைச் சேர்ந்த மயில்வாகனன்(47), விபத்து நடந்தபோது லாரி மீது மோதிய தில் காயமடைந்தார். அவருடன் சென்ற, அவரது மகன் பகவத் காயமின்றி தப்பினார்.
கடற்படை அதிகாரி பலி
இதற்கிடையே மதுரை அருகே நடந்த மற்றொரு விபத்தில் கடற்படை அதிகாரி ஒருவர் பலியானார். நெய்வேலி எம்.ஜி. சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சரவணக்குமார்(40). இவர் கேரள மாநிலம் கொச்சி கடற்படை தளத்தில் கமாண் டராகப் பணிபுரிந்து வந்தார். இவர் விடுமுறையில் நெய்வேலி வந்தார்.
இவர் தனது சகோதரியின் குடும்பத்தினருடன் நேற்று காரில் மதுரை சென்றுகொண்டிருந்தார். காரை சரவணக்குமார் ஓட்டினார். மேலூர் அருகே நான்குவழிச் சாலையில் வந்தபோது முன்னே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மேலூர் செல்ல பக்க வாட்டில் திடீரென திரும்பியது.
அதன் மீது மோதாமல் இருக்க சரவணக்குமார் முயன் றார். அப்போது கார் கட்டுப் பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள மின்கம்பம் மீது மோதி யது. இதில் சரவணக்குமார் சம்பவ இடத்திலேயே பலியா னார். காரில் வந்த அனை வரும் காயமடைந்து மதுரை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர்.