தமிழகம்

இரு வேறு விபத்துகளில் 7 பேர் பலி: 28 பேர் மருத்துவமனையில் அனுமதி

செய்திப்பிரிவு

கரூர் மற்றும் கோவை அருகே நடந்த இரு வேறு விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். 28 பேர் காயமடைந்தனர்.

திருப்பூரில் இருந்து திருச்சிக்கு அரசுப் பேருந்து நேற்று புறப்பட் டது. திருப்பூரைச் சேர்ந்த யுவ ராஜ்(48) பேருந்தை ஓட்டினார். கரூர் அருகே உள்ள மொச்சக் கொட்டாம்பாளையம் பகுதியில் முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த மணல் லாரி மீது பேருந்து மோதி யது.

போக்குவரத்து பாதிப்பு

இதில் லாரி ஓட்டுநர் காங்கயம் அப்பாச்சி(45), பேருந்து பயணிகள் மணப்பாறை தனலட்சுமி(24), திருப்பூர் ராசாத்தி(60) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், அரசுப் பேருந்து ஓட்டுநர் யுவராஜ் உள்ளிட்ட 20-க்கும் மேற் பட்டோர் காயமடைந்தனர். அவர் கள், கரூர் அரசு, தனியார் மருத் துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். விபத்து காரணமாக கரூர்- கோவை சாலையில் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.

இந்நிலையில், மேல்சிகிச்சைக் காக சேலத்துக்கு கொண்டுசெல்லப் பட்ட தென்னிலை பழனியம் மாள்(60), கோவையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட திருப்பூர் ஜெய் ஆகாஷ்(8) ஆகியோர், வழியி லேயே உயிரிழந்தனர்.

தம்பிதுரை ஆறுதல்

மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டதுடன், மருத்துவமனைகளில் சேர்க்கப் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

விபத்து குறித்து கரூர் நகர போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடைக்குள் லாரி புகுந்து 2 பேர் பலி

திருச்சியில் இருந்து கோவை நோக்கி சிமென்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று காலை லாரி வந்தது. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த சங்கர் லாரியை ஓட்டி வந்தார்.

கேரளாவுக்கு சுற்றுலா சென்று விட்டு, நாகர்கோவில் நோக்கி தனியார் கல்லூரியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் காரில் எதிர்திசையில் சென்றுகொண்டு இருந்தனர். இந்நிலையில், சூலூர், திருச்சி சாலை குளத்தேரி கரைப் பகுதியில் அந்த லாரியும், மாணவர்கள் சென்ற காரும் மோதிக்கொண்டன. இதில், கட்டுப்பாட்டை இழந்த லாரி வலதுபுறத்தில் சாலையோரம் இருந்த மளிகைக் கடைக்குள் புகுந்து இடித்து நின்றது.

இந்த விபத்தில் மளிகைக் கடை யில் பொருள் வாங்குவதற்காக நின்றிருந்த சூலூரைச் சேர்ந்த கருப்பண்ணன்(60), முத்துக்கவுண் டன்புதூரைச் சேர்ந்த பாலாஜி(37) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர், காரில் இருந்த 4 மாணவர்கள் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.

SCROLL FOR NEXT