தமிழகம்

தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருந்தாலும் கல்வி, சுகாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டும்: கோவை இன்டெக் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தொழில்நுட்ப ரீதியில் நாம் முன்ன ணியில் இருந்தாலும், அடிப்படைக் கல்வி, உள்கட்டமைப்பு, சுகாதாரத்தில் வளர்ச்சி அடைய வேண்டி யுள்ளது என மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச் சக இணையமைச்சர் ஹரிபாய் பார்திபாய் செளத்ரி தெரிவித்துள் ளார்.

கோவை கொடிசியா தொழிற் காட்சி வளாகத்தில், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா) சார்பில் 17-வது சர்வதேச இயந்திரம் மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி (இன்டெக் 2017) நேற்று தொடங்கி யது. கொடிசியா தலைவர் வி.சுந்த ரம் வரவேற்றார். மத்திய இணை யமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: தொழில் துறையில் தமிழகத்தின் வளர்ச்சி சிறப்பாக உள்ளது.

சர்வதேச அளவில் இந்தியாவின் மதிப்பு உயரத் தொடங்கியுள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்தபோது, நாட்டின் வரவு - செலவுக்கு இடையேயான இடைவெளி ரூ.5 லட்சம் கோடியாகவும், பணவீக்கம் இரட்டை இலக்கத்திலும் இருந்தது. நிலக்கரி சுரங்க ஏலம், ரூ.1.6 லட்சம் கோடிக்கான அலைக்கற்றை ஏலம் ஆகியவை மூலம் இந்த இடைவெளி குறைக்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களுக்குமான ஜன்தன் திட்ட வங்கிக் கணக்குகள் மூலம் ரூ.50 கோடி வரை மிச்சப் படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு, ரயில்வே, கட்டுமானத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ள வேளையில், உள்நாட்டு உற்பத் தியை அதிகப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்ககம் மூலம் நாடு முழுவதும் 18 தொழில்நுட்ப மையங்களில் 2.5 லட்சம் பேருக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் குறைந்தபட்சம் 20 சதவீத மூலப் பொருட்களை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்ககத்திடம் இருந்து பெறவும், அதற்கான தொகையை 45 நாட்களுக்குள் ஒப்படைக்கவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியா தொழில்நுட்ப ரீதியில் முன்னணியில் இருந்தா லும், அடிப்படைக் கல்வி, உள் கட்டமைப்பு, சுகாதாரத்தில் வளர்ச்சி காண வேண்டியுள்ளது. தமிழகத்தில் பாதுகாப்புத்துறை தளவாடங்கள் தயாரிப்புக்கான ‘டிபென்ஸ் பார்க்’ தொடங்க வேண்டு மென கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கு முன்பாக, குஜராத்தில் இத்திட்டம் வெற்றிகரமாக நடத்தப் படுவதை, தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். இந்த தொழில் கண்காட்சி ஜூன் 5-ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங் களில் இருந்தும், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் 536 நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை இங்கு கண்காட் சிக்கு வைத்துள்ளன. சுமார் 40 நிறுவனங்கள் தங்கள் பொருள், தொழில்நுட்பத்தை இங்கு வெளி யிடுகிறார்கள். இதற்கான ஏற்பாடு களை கொடிசியா தலைவர் சுந்தரம், கண்காட்சி தலைவர் பாலு, துணைத் தலைவர் ராமச்சந்திரன், செயலாளர் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, எம்.சி.சம்பத், பா.பெஞ்சமின், மத்திய கயிறு வாரியத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT