7 பேர் விடுதலையை வலியுறுத்தி வேலூரில் இருந்து சென்னை நோக்கி நடைபெறும் பேரணியில் அரசியல் சாயம் இருக்கக் கூடாது என பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் தெரிவித்தார்.
வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ள பேரறிவாளனை அவரது தாயார் அற்பு தம்மாள் மற்றும் திரைப்பட இயக்குநர் ஜன நாதன் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.
இதுகுறித்து, இயக்குநர் ஜனநாதன் கூறும்போது, ‘‘25 ஆண்டுகள் சிறை அனுபவம் குறித்து நீங்கள் புத்தகம் எழுத வேண்டும் என்று பேரறிவாளனிடம் கோரிக்கை வைத்தேன். ஏன் என்றால் அவரது சூழ்நிலையை வேறு எந்த கதாசிரியராலும் எழுத முடியாது. அந்த எழுத்துப் பணியை பேரறிவாளன் தொடங்கி உள்ளார். 7 பேர் விடுதலைக்காக அரசு ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொள்ளும் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிப் பொறுப்பேற்றது மகிழ்ச்சி என பேரறிவாளன் தெரிவித்தார்’’ என்றார்.
அற்புதம்மாள் கூறும்போது, ‘‘7 பேரை விடுவிக்க தமிழக முதல்வர் ஜெய லலிதா 2 முறை நடவடிக்கை எடுத்தார். அது, தடைபட்டு நிற்கிறது. 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி வரும் 11-ம் தேதி நடைபெறும் வாகனப் பேரணி வேலூரில் தொடங்கி சென்னை கோட்டையில் முடிகிறது. பின்னர் முதல்வரையும் சந்திக்க உள்ளோம்.
பேரணியில் அனைத்து அரசியல் கட்சி, இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் எந்த அடையாளம் இல்லாமல் வருமாறு அழைத்துள்ளோம். எந்த அரசியல் சாயமும் இருக்கக் கூடாது. அரசியல் கட்சியினர் மனித நேயத் தலைவர்களாக பேரணியில் பங்கேற் பதில் ஆட்சேபனையும் இல்லை.
எங்கள் கோரிக்கையை ஜெயலலிதாதான் நிறைவேற்ற வேண்டும். மோடியும் எங்களுக்கு குரல் கொடுப்பார் என நம்புகிறேன்’’ என்றார்.