மணல் விற்பனையில் ரூ.5 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அதிமுக எம்எல்ஏ, பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது புகார் கூறி ஒட்டப்பட்ட சுவரொட்டியால் காஞ்சிபுரத்தில் பரபரப்பு நிலவுகிறது.
காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் பறிமுதல் செய்த மணல் தற்போது இரண்டாம் கட்டமாக விற்பனை ஆக தொடங்கியுள்ளது முதல் கட்டமாகக் கடந்த நவம்பர் 27 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் புதன்கிழமை சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
சுவரொட்டியில் உள்ள வாசகம்: மணல் விற்பனையின்போது, மணல் கிடங்குக்குச் சென்று மணல் பெறுவதற்கான ரசீது வழங்குவதில் ரூ.5 கோடி ஊழல் நடந்திருக்கிறது. மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் பொதுப்பணித்துறையின் கீழ்பாலாறு வடிநிலக் கோட்டச் செயற்பொறியாளர் கணேசன், காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் சோமசுந்தரம், சட்டவிரோதமாக மணல் கிடங்கு நடத்தி வந்த ஆறுமுகம் ஆகியோர் பிடியில் கீழ்பாலாறு வடிநிலக் கோட்டம் சிக்கியுள்ளது. இது தொடர்பாக மாவட்ட நிர் வாகம், பொதுப்பணித்துறை நட வடிக்கை எடுக்குமா. இவ்வாறு சுவரொட்டியில் உள்ளது. இந்த சுவரொட்டியை யார் ஒட்டியது, அச்சிட்ட அச்சகம் எது என்ற விவரங்கள் தெரியவில்லை.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த எம்எல்ஏ சோம சுந்தரத் தின் ஆதரவாளர்கள் சுவரொட்டியைக் கிழித்தெறிந் தனர்.
இதுகுறித்து எம்எல்ஏ சோமசுந்தரத்திடம் கேட்போது, “யார் மீதோ இருக்கும் காழ்ப் புணர்ச்சியை வெளிப்படுத்த என்னை பயன்படுத்திக் கொண் டுள்ளனர். நான் மணல் விவகாரத் தில் தலையிடவே இல்லை. இது குறித்து கட்சி தலைமையிடம் தெரிவித்து, போலீஸில் புகார் தெரிவிக்க அனுமதி கோரி யிருக்கிறேன். அவர்கள் அனுமதி அளித்தவுடன் புகார் செய்வேன் என்றார்.
பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் கணேசனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது: நான் எந்த தவறையும் செய்யவில்லை. மணல் விற்பனை அனைத்தும் வெளிப்படையாகத்தான் நடை
பெற்றது. முறைகேடு நடந்திருந் தால், மாவட்ட ஆட்சியரிடமோ, பொதுப்பணித்துறை செயலரிடமோ புகார் தெரிவித்திருக்கலாம். என் மீது எந்த விசாரணை வைத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். சுவரொட்டி தொடர்பாக போலீஸில் புகார் அளிக்க பொதுப்பணித்துறை தலைமையிடம் அனுமதி கோரியிருக்கிறேன் என்றார்.