கூடங்குளம் முதலாவது அணு உலையில் பராமரிப்பு பணி தொடங்கி யுள்ளதால், அடுத்த 8 வாரங்களுக்கு மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக, அணு மின் நிலைய வளாக இயக்குநர் ஆர்.எஸ்.சுந்தர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள முதலாவது அணு உலையில் 1,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. சமீபத்தில் மின் உற்பத்தி தொடங்கி ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு பராமரிப்பு பணிக்காக மின் உற்பத்தி பணி நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அணுமின் நிலையத்தில் அவ்வப்போது மின் உற்பத்தி செய்தும், நிறுத்தியும் அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வந்தனர்.
மின்சாரம் உற்பத்தியாகும் டர்பைன் ஜெனரேட்டரில் பழுது இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அநேகமாக பழுதான டர்பைனுக்கு பதிலாக புதிய டர்பைன் பொருத் தப்படலாம் என்றும் கூறப்பட் டிருந்தது.
ஆர்.எஸ்.சுந்தர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூடங்குளம் முதலாவது அணுஉலையின் டர்பைன் ஜெனரேட்டர் மின் உற்பத்திக்காக தொடர்ந்து 4,701 மணி நேரத்துக்கு இயக்கப்பட்டது. இதன்மூலம் 282.5 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய் யப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் மத்திய மின் தொகுப்பில் இணைக்கப்பட்டு வந்தது.வணிக ரீதியான மின் உற்பத் தியை தொடங்கும் முன் டர்பைன் மற்றும் அதிலுள்ள உபகரணங்களை பராமரிக் கவும், ஆய்வு செய்யவும் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது பராமரிப்பு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. டர்பைனிலுள்ள சில உபகரணங்களை மாற்ற வேண்டியிருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக் கின்றன. இதனால் கூடங்குளம் முதலாவது அணு உலை மீண்டும் மின் உற்பத்தி செய்வதற்கு 6 முதல் 8 வாரங்கள் வரை ஆகலாம் என்றார்.