வேலூர் விஐடி பல்கலைக்கழகத் தில் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவான ‘கிராவிடாஸ் -16’ கடந்த 23-ம் தேதி தொடங்கியது.
இதில் உள்நாடு மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்து 122 பல்கலைக் கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த 20 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
3 நாட்கள் நடைபெற்ற கிராவி டாஸ் சர்வதேச திருவிழாவின் நிறைவு விழா நேற்று நடைபெற் றது. நிகழ்ச்சியில் கிராவிடாஸ் அமைப்பாளர் சுதாகர் வரவேற்றார். எச்.பி. கம்ப்யூட்டர் நிறுவனத்தின் துணைத் தலைவர் நரேஷ்ஷா கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
2011-ம் ஆண்டு முதல் உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியானது மிகப்பெரிய மாற்றத்தை உரு வாக்கியுள்ளது. முன்னேற்றம் அடைந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகள் மனித வாழ்க்கை முறையை மாற்றி அமைக்கிறது.
மேற்கத்திய நாடுகளில் ஓட்டு நர்கள் இல்லாமலேயே ரிமோட் மூலம் கார்களை இயக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் ஏற்பட்ட புதிய கண்டுபிடிப்புகளின் வளர்ச்சியே முக்கிய காரணமாகும்.
தற்போது நாள்தோறும் 15 பில்லியன் மக்கள் சமூக வலை தளங்கள், கிளவுட், ஐஓடி உள்ளிட் டவைகளின் பார்வையாளர்களாக உள்ளனர். 2020-ம் ஆண்டில் இது 20 முதல் 25 பில்லியனாக உயரும் வாய்ப்புகள் உள்ளன.
எனவே, அதற்குத் தகுந்த வகையில் புதிய, புதிய கண்டுபிடிப்புகள் அவசிய மாகிறது. இதனை உருவாக்குவது தொழில்நுட்பக் கல்வியை படிக் கும் மாணவர்களின் முக்கிய பணி யாகும். இது கல்வி நிறுவனங்கள் மூலம் உருவாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதையடுத்து, கிராவிடாஸ் அறிவுசார் தொழில்நுட்ப திருவிழாவில் புதிய அறிவியல் மற்றும் பொறியியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கிய இந்தியா டுடே பத்திரிகையின் எடிட்டோரியல் இயக்குநர் ராஜ்செங்கப்பா பேசிய தாவது:
பொறியியல் கல்வியில் விஐடி பல்கலைக்கழகம் சில ஆண்டு களாக தொடர்ந்து முன்னேறி வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி யில் இந்தியா பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் விஐடி துணைவேந்தர் ஆனந்த் ஏ.சாமுவேல், இணை துணைவேந்தர் நாராயணன், மாணவர் நலன் இயக்குநர் அமீத்மகேந்திரகர் ஆகியோர் பங்கேற்றனர்.