பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 107-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனையொட்டி, ராமநாதபுரத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் அமைச்சர்கள், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், மற்றும் சில முக்கியப் பிரமுகர்களும் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.