பழநி பெரியநாயகியம்மன் கோயி லில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கி யது.
பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் 10 நாட்கள் நடைபெறும் தைப்பூசத் திருவிழாவின் தொடக்க மாக நேற்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. முன்னதாக முத்துக் குமார சுவாமி, வள்ளி, தேவசேனா வுக்கு சிறப்பு அபிஷேகம், ஆரா தனைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோயில் கொடி மரத்துக்கு பூஜைகள் செய்யப்பட் டன. அதையடுத்து சேவல், வேல், மயில் பொறித்த மஞ்சள் நிறக் கொடியேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் பழநி தண்டாயுத பாணி சுவாமி கோயில் இணை ஆணையர் க.ராஜமாணிக்கம், துணை ஆணையர் ரா.மேனகா மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ் வான தேரோட்டம் வரும் 9-ம் தேதி மாலை 4 மணிக்கு நடை பெறுகிறது. தைப்பூச திரு விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழநிக்கு வந்தவண்ணம் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத் துக் கழக (மதுரை) நிர்வாக இயக்குநர் எம்.பாலகிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பழநி தைப்பூசத் திருவிழாவுக்கு திண்டுக்கல், மதுரை, திருச்சி, காரைக்குடி, நத்தம், புதுக் கோட்டை, தேனி, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து பிப்.6 முதல் 10-ம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சுமார் 350 சிறப்பு பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.