தமிழக சட்டப்பேரவையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவை கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.
பேரவையில் நேற்று கைத்தறித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:-
அதிமுக அரசு இனிவரும் ஆண்டுகளிலும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியதுபோல இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் அதிமுக ஆட்சியே தொடரும். என்னைத் தேர்ந்தெடுத்த வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதி வாடிக்கையாளர்களுக்கு நன்றியை உரித்தாக்குவதோடு, கைத்தறி மற்றும் துணிநூல் துறைக்கு என்னை அமைச்சராக நியமித்து இரண்டாம் முறையாக மானியக் கோரிக்கை சமர்ப்பிக்கும் நல்வாய்ப்பினை வழங்கிய மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு புகழஞ்சலியை செலுத்துகிறேன்.
1980-களில் தொடங்கி இதுநாள் வரை அதிமுகவின் சுமை தாங்கியாய், தியாகத்தின் திருவுருவாய்த் திகழும் என் தாய், அதிமுக பொதுச் செயலாளர் சின்னம்மாவை (சசிகலா) வணங்கி, முதல்வருக்கு நன்றி தெரிவித்து எனது பதிலுரையை நிறைவு செய்கிறேன் என்றார் ஓ.எஸ்.மணியன்.